போலியான புகைப்படங்கள் :
நாம எல்லாருமே பாடபுத்தகங்களிலும் செய்திகளிலும் பல இடங்களிலும் நம்ம பூமி கோளின் புகைப்படங்களை, வீடியோக்களை பாத்திருப்போம்…
ஆனா அதெல்லாமே போலியான அல்லது எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தான்…
அட என்னாப்பா சல்மான் சொல்ற…
அப்ப எந்த போட்டோ தான் நெசம்னு கேக்குறீங்களா…
தெளிவா சொல்றேன் வாங்க…
முதல் புகைப்படம் :
1944 ல எனக்கு ரொம்ப பிடிச்ச ஹிட்லரின் (ஏன் பிடிக்கும்னு தனியா BLOG எழுதுறேன்) ஜெர்மனிய நாஜி படைகள் V-2 எனப்படும் சிறிய வகை ராக்கெட்ல மோஷன் பிக்சர் கேமராவை பொருத்தி அனுப்பி வச்சாங்க…
நம்ம பூமியோட ATMOSPHERE ஐ தாண்டின உடனே ஒரு எல்லை இருக்கு…
அது தான் KARMAN LINE…
அங்கிருந்து எடுத்த போட்டோ தாங்க இது…
டெலெஸ்கோப் எல்லாம் வந்து உலகம் உருண்டைன்னு நிருபித்த பிறகும் கூட நிறைய பேரு உலகம் தட்டைன்னு தான் நெனச்சாங்க…
1944 ல இந்த புகைப்படம் நிறைய பேர உலகம் உருண்டை தான்னு நம்ப வச்சது…
அப்புறமா PANORAMA MODE ல 1947 ல ஒரு போட்டோ எடுத்தாங்க…
(அதாவது ஜெட் விமானத்துல பறந்துக்கிட்டே ஒவ்வொரு பாகமா போட்டோ எடுத்து ஒன்னா வச்சு பாத்தாங்க…)
அதுக்கு அப்புறமா நிறைய படங்கள 1950-60 வரைக்கும் எடுத்தாங்க ஆனா எதுவும் சரியா வரல…
முதல் SATELLITE படம் :
1960 ல ஒரு WEATHER SATELLITE நம்ம பூமியை புகைப்படம் எடுத்துச்சு…
அப்ப அது ரொம்ப பெரிய விஷயம்…எல்லா தொலைகாட்சிகளும் அதை ஒளிபரப்பு செய்ய எல்லாரும் வாயை பொளந்து பாத்தாங்களாம்..
இப்ப எல்லாம் நாம சேட்டிலைட் மேப் பாக்குறோம்ல…அந்த மாதிரி ஒரு புகைப்படத்த இன்னொரு சேட்டிலைட்ட வச்சு அதே 1960 ல எடுத்தாங்க…
அதுக்கபுறமா நிலா வரைக்கும் மனிதனின் கால்தடம் போற வரைக்கும் நிறைய புகைப்படங்கள எடுத்தாங்க…
இது நிலாவில் இருந்து பூமியை எடுத்த முதல் புகைப்படம்…
அதே 1966 ல GEOSTATIONARY ORBIT ல இருந்து எடுத்த புகைப்படம் இது…இது தாங்க பூமியை முழு கோள வடிவமாக எடுத்த முதல் புகைப்படம்…
உங்களுக்கு தெரியுமா ??
பூமி நெருப்பு கோழியின் முட்டை வடிவில் அதாவது SPHERICAL SHAPE இல உள்ளதாக 1400 வருடங்களுக்கு முன்பே குர்ஆன் கூறுகிறது…
முதல் கலர் படம் :
அதே 1967 ல இன்னும் கொஞ்சம் கிளியரா போட்டோ எடுத்து CD போட்டு வித்தாங்கன்னா பாருங்களேன்…(படம் : ATS SATELLITE)
அப்புறமா நிறைய புகைப்படங்கள எடுக்க ஆரம்பிச்சாங்க…
இது தாங்க முதன் முதலா முழு பூமியும் FULL ஆஹ் சுத்தறத முழுசா எடுத்த வீடியோ…
சரிங்க ரொம்ப நேரம் எடுத்துட்டேன்…போயிட்டு வரேன்…மீண்டும் இன்னுமொரு நல்ல செய்தியோட வரேன்…BYE BYE….

