வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வசீம் அக்ரம் 10-09-2021 அன்று படுகொலை செய்யப்பட்டார்…
கஞ்சாவிலிருந்து இளைஞர்களை காக்க வசீம் அக்ரம் கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் பற்றி துப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது…
சகோதரர் வசீம் போலிசில் தன்னைக் காட்டிகொடுத்ததாக கிடைத்த தகவலை நம்பிய டீல் இம்தியாஸ் வண்டலூர் பகுதியின் பிரபல கூலிப்படைத் தலைவன் சீஸிங் ராஜா மற்றும் செல்லாவை தொடர்பு கொண்டு கொலைக்கான சதி தீட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த வண்டியின் பின்னால் வந்த வெள்ளை நிறம் வாகனமும் விசாரணை வளையத்தில் சிக்கியது.
முதல் காரில் ஓட்டேரி செல்லா, எபி, ராஜன், மினிஸ்,பிரவின், கதிர் (சொந்த ஊர் சிதம்பரம்), பிடிபட்ட டில்லி குமார், பிரசாந்த், மண்ணிவாக்கம் சத்யா,அகஸ்டின் என்றும், மேலும் மற்றொரு காரில் வாணியம்பாடியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ், யூசுப், அலி, மற்றும் நித்யா ஆகியோர் வந்தத்தையும் போலிசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக ஓட்டேரி செல்லாவிடம், வாணியம்பாடி இம்தியாஸ் போனில் டீல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கூலிப்படைக்கு 10 லட்சம் ரேட் பேசியதாகவும் தெரிகிறது
சென்னையில் ரவுடிகளின் கொட்டம் அடக்கப்பட்டு வருவதால், தற்போது சென்னை, செங்கல்பட்டு எல்லையில் கூலிப்படையினர் டேரா அடித்துள்ளார்கள்.
மேலும் ஓட்டேரி, மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் ரேட்டுக்கு தகுந்தாற்போல் கூலிப்படையினர் உள்ளனர்.
ஊரப்பாக்கத்தில் மட்டும் மூன்று பஞ்சாயத்து தலைவர்களை வரிசையாக வெட்டி கொலை செய்துள்ளனர். அந்த அளவுக்கு அங்கு கூலிப்படையின் கை அங்கு ஓங்கியிருக்கிறது.
ஆம்பூர் வாணியம்பாடி பகுதியில் கஞ்சா வியாபாரிகள் பெருமளவில் அதிகரித்துள்ளனர்…
காவல்துறை இப்படிபட்ட கூலிப்படையினர் மற்றும் கஞ்சா வியாபாரிகளின் கொட்டத்தை அடக்குமா..??
அல்லது இன்னுமொரு சமூக ஆர்வலரின் கொலை நடக்க கை கட்டி வேடிக்கை பார்க்குமா..??
– ஆம்பூர் சல்மான்




Horrible