ஆம்பூர்ல பல ஷூ கம்பெனிகள் உலகில் மிக பிரபலமான பல முன்னணி பிராண்டுகளின் ஷூக்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்…
ஆம்பூர்ல கொஞ்ச நாளா ஒரு பிரபல ஷூ கம்பெனி ஷூக்களை கண்டெய்னரில் ஏற்றி சீல் வைத்து துறைமுகம் மூலம் கப்பல்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது…
கப்பல் அந்நாட்டிலுள்ள துறைமுகத்திற்கு சென்று கண்டனர் இறக்கி சீலை திறந்து பார்த்த போது அந்த கஸ்டமர் அதிர்ச்சிக்குள்ளாகி போயுள்ளார்…
கண்டெய்னரின் சீல் உடைக்கப்படாமலேயே அந்தக் கண்டெய்னரில் இருந்த ஷூக்கள் அனைத்தும் திருடி பிராண்ட் அல்லாத போலியான குறைந்த விலை ஷூக்கள் வைத்துள்ளது தெரிய வந்தது…
இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அவர்களிடம் புகார் சென்றுள்ளது…
தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி துவங்கியது…
இன்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அவர்கள் ஒரு பேட்டி கொடுக்கிறார்…
7 கொள்ளையர்களை நாங்கள் பிடித்திருக்கிறோம் என்றும், கன்டெய்னர் ட்ரைவர்களிடம் கொள்ளையர்கள் ஒரு டீல் போட்டுள்ளனர்…
கன்டெய்னரை 2 மணி நேரம் ஒரு இடததில் விட்டு விட வேண்டும்…
அதற்கு ஒரு இலட்சம் வழங்குகிறோம் என ஆசை காட்டி ஒத்துக்கொள்ள வைத்துள்ளனர்…
வண்டியை ஒரு மறைவான இடத்தில் நிறுத்தி கண்டெய்னர் சீலை உடைக்காமல் கண்டெய்னரின் நெட் போல்டுகளை திறந்து அலேக்காக பொருட்களை திருடிவிட்டு மற்ற போலியான பொருட்களை உள்ளே வைத்துள்ளனர்…
ஷூக்கள் மட்டுமல்லாமல் இதே பாணியில் மருந்து பொருட்கள், கீபோர்டுகள் போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன…
இந்த திருட்டில் கொள்ளையர்கள் பல பிரிவாக செயல்பட்டுள்ளனர்…
டிரைவரிடம் டீல் பேச ஒரு பிரிவு…
போலி பொருட்களை லோக்கலில் தயாரிக்க ஒரு பிரிவு…
கண்டெய்னரை பிரிக்க ஒரு பிரிவு…
திருடிய பொருட்களை சந்தையில் விற்க ஒரு பிரிவு என மிகப்பெரிய கொள்ளையை திட்டமிட்டு நடத்தியுள்ளனர்…
மேலும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், இது போல வேறு எந்த நிறுவனமாவது ஏமாற்றப்பட்டு இருந்தால் போலீஸிடம் தகவல் கூறலாம் என கூறியுள்ளார்…

%20(4).jpeg)
%20(6).jpeg)
%20(7).jpeg)
%20(8).jpeg)