சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் இது…
ஒரு பெண்ணின் நம்பிக்கையையும், வீரத்தையும், வெற்றியையும் ஒருசேர அள்ளி காண்பித்த புகைப்படம்…
ஸ்விக்கி நிறுவனத்தின் பளுவான Bag உடன் வீதிகளில் நடந்தே செல்லும் தேவதை…
யாரோ அவள் ?
தேடலில் இறங்கியது மூக்நாயக் எனும் பத்திரிக்கை குழு…
(அம்பேத்கர் உருவாக்கிய பத்திரிக்கை)
லக்னோவில் காண கிடைப்பாள் என கூறியதும் விரைந்த குழு காலை முதல் தேடி ஓரிடத்தில் கண்டுகொண்டது…
பின் சென்ற குழு அந்த பெண் ஜனதா நகரி பகுதியில் ஓர் சிக்கலான வீட்டில் நுழைவதை கண்டனர்…
கதவை தட்டி “அம்மா உம்மை பின் தொடர்ந்தோம்…
யாரம்மா நீ…?
ஸ்விக்கியில் பணிபுரிகிறாயா??” என கேட்டதற்கு வாருங்கள் உள்ளே என உபசரித்தாள் அவள்…
3 குழந்தைகள் சாப்பிட்டு கொண்டிருந்தனர்…
வீட்டில் இடப்பற்றாக்குறை பரந்து விரிந்து கிடந்தது…
அவள் சொன்னால் கண்ணீர் தான் வரும்…
அவள் சொன்னதை நான் சொல்கிறேன் கேளுங்கள்…
3 வருடமாய் மாடாய் உழைக்கும் இவள், 23 வருடங்களுக்கு முன் திருமணமானவள், 4 குழந்தைக்கு தாய் இவள்…
வறுமையில் பிறந்து வறுமையில் வளர்ந்த இவளுக்கு ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது…
20 வருடங்கள் வாழ்க்கை இப்படியே ஓட ஒரு நாள் ஆட்டோவை திருடி சென்று விட்டான் கயவன் ஒருவன்…
இருந்த ஒரே வாழ்வாதாரத்தையும் ஒருவன் திருடி செல்ல என்ன செய்வதென்றே தெரியாமல் பிச்சை எடுக்க ஆரம்பித்தார் கணவர்…
மிகுந்த மன உளைச்சலில் இருந்த கணவரோ ஒரு நாள் வீடு திரும்பவில்லை…
கட்டிய தேவதையை 4 குழந்தைகளோடு விட்டு விட்டு எங்கு சென்றானோ…
கணவர் உயிருடன் உள்ளானா இறந்துவிட்டானா என்று கூட தெரியாமல் தேடி அலைந்த மனைவி குழந்தைகள் பசிக்கு அழுவதை கண்டு உழைக்க ஆரம்பித்தாள்…
22 வயது மகள் Lubna வை 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தாள்…
தற்போது வீட்டில் Bushra (19), Nashra (7) என இரு மகள்களும், Yaseen (11) என ஒரு மகனும் உள்ளனர்…
படிக்காத ஒரு தனிப்பெண்ணால் என்ன செய்ய இயலும் ? எனும் சொற்களை உடைத்தெறிந்து போராட இயலும் என கூறினாள் இவள்…
ஆம் காலை மாலை ஒரு வீட்டில் வேலை பார்க்கும் இவள் மற்ற நேரங்களில் Disposable Cups களை தெருவோர டீக்கடைகளுக்கு சப்ளை செய்கிறார்…
ஒரு ரோலில் 2-5 ரூபாய் கிடைக்கும்…
தினமும் 20-25 கிலோமீட்டர் நடக்கிறாள் இவள்…
ஸ்விக்கி பேக் என்ன விஷயம் என கேட்டோம்…!
ஒரு தெருவோர வியாபாரியிடம் அதிக எடைகளை சுமந்து செல்ல ஏதுவாக ஒரு Bag கேட்டேன்…
50 ரூபாய்களை பெற்று கொண்டு இதனை கொடுத்தார் அவர் என சிரித்தாள் அழகு தேவதை ரிஸ்வானா…
செய்தி சேகரிப்பு : மூக் நாயக் பத்திரிக்கை
தமிழ் தொகுப்பு : ஆம்பூர் சல்மான்




