🛑காதலர் தினமாம் இன்று…
இஸ்லாமும் காதலும்…
அட என்னாடா இது…
ரெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் எண்ணலாம்…
பலருக்கு இந்நேரம் என் மீது கோபமும் வந்திருக்கும்…
எல்லா விஷயங்களையும் பேசும் இஸ்லாம் காதலை பற்றி மட்டும் பேசவில்லை, பேசாது, பேச கூடாது என ஒரு கூற்று…
யார் சொன்னது…?
இஸ்லாத்ததின் வரலாறு எனும் புத்தகத்தின் முதல் பக்கமே காதலில் இருந்து தான் ஆரம்பிக்கும்…
ஆம்…ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களின் காதல் தான் இஸ்லாத்தின் முதல் அத்தியாயம்…
எந்த நபி தான் காதலிக்கவில்லை…?
(ரொம்ப அதிகமா பேசுறான்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது…)
ஒவ்வொண்ணா சொல்றேன் கேளுங்க…
அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்றேன்…
இந்த உலகத்திற்கு அழகாய் காதலிக்க கற்று கொடுத்தது இஸ்லாம் தாங்க…
ஒவ்வொரு நபிமார்களின் காதலிலும் ஒரு படிப்பினை…
ப்பாஹ்ஹ்…
சுப்ஹானல்லாஹ்…
ஆதம் ஹவ்வா காதலில் தாங்கள் செய்த தவறால் வந்த பிரிவினையில் ஒருவரை ஒருவர் சந்திக்க பட்ட கஷ்டங்கள் படிப்பினை…
ஹாஜிரா அம்மையார் இப்ராஹிம் அலை மீது கொண்ட காதல் தான் அவர்களின் தியாகத்திற்கும் பொறுமைக்கும் வித்து…
யூசுப் (அலை) மீது சுலைகா அம்மையார் கொண்ட காதல் தான் யூசுப் (அலை) அவர்களின் இறையச்சம் என்னவென்று உலகிற்கு காட்டியது…
வழிப்போக்கராக மத்யன் வந்த மூஸா (அலை) கிணற்றில் தண்ணீர் பிடிக்க வந்த பெண்ணை மணந்ததில் கொலை குற்றவாளி என தேடப்பட்டு வந்த மூசாவிற்கு அடைக்கலம் தந்து அவரை அடையாளம் கண்டு காசு பணம் சொந்தம் என எதுவுமில்லா அவருக்கு தம் மகளை கரம்பிடித்து தந்த ஷுஐப் (அலை) அவர்களின் தொலைநோக்கு பார்வை ஜாதி பார்க்கும், குலம் பார்க்கும், கோத்திரம் பார்க்கும், செல்வம் பார்க்கும் இன்றைய பெற்றோர்களுக்கு சம்மட்டி அடி…
நேர்மைக்கு இலக்கணம் அந்த இளைஞன் என பலர் கூறியதை கண்டு சோதித்து உளவு பார்த்து தம் காதலை பெரியோர்களின் முன்னிலையில் திருமணமாக்கி தம் செல்வத்தை எல்லாம் தன் வள்ளல் கணவரோடு இணைந்து தர்மம் செய்தாரே கதீஜா அம்மையார்…
அவரின் காதலுக்கு ஈடாகுமா என்ன…
விதவைக்கு மறுவாழ்வு வழங்கு என கூறிய பெருமானார் கூறியதுடன் இல்லாமல் தம் இளம் வயதில் 40 வயது விதவையை கரம் பிடித்தார்களே இதை விட படிப்பினை வேறெதுவும் உண்டோ…
ஆயிஷாவின் (ரழி) காதல் மற்ற மனைவிகளை பொறாமைப்பட வைத்ததுடன் இல்லாமல் இந்த உலகிற்கு எவ்வளவோ ஹதீஸ்களை, எவ்வளவோ சுன்னத்துகளை அறிய வைக்க உதவியதே…
தயங்கி தயங்கி எவ்வாறு கேட்பது என அலி (ரழி) ஹஜ்ரத் அபூபக்கர் அவர்களை விட்டு தூதனுப்பி பெண் கேட்டார்க்களே ஃபாத்திமா (ரழி) அவர்களை…
அந்த அலி ஃபாத்திமா ஜோடிக்கு இணை என்னவோ..??
காதல் ஒரு உணர்வு…
இறைவன் தான் அதையும் படைத்தவன்…
அவனே அதை அழகாய் கற்று கொடுத்தும் உள்ளான்…
காதலை இஸ்லாம் தடை செய்யவில்லை…
காதல் எனும் பெயரில் நடக்கும் கன்றாவியை தான் இஸ்லாம் தடுக்கின்றது…
வெறுக்கின்றது…
மது அருந்தாதீர்…
கொலை செய்யாதீர்…
திருடாதீர் என இன்ன இன்னவைகளை செய்யாதீர் என கூறும் இஸ்லாம்…
விபச்சாரம் செய்யாதீர் என கூறவில்லை…
மாறாக விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்கிறது…
அவ்வளவு அதனை அவ்வளவு தீமையான செயல் என்கிறது இஸ்லாம்…
ஆனால் காதலுக்கு ஒரு தினம் என்று கூறிவிட்டு காமத்திற்கான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது பிப்ரவரி 14…
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் கேடான செயல்களை விட்டும் பாதுகாப்பானாக…

அருமையாக உள்ளது