முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்திய அரசை குறிப்பிடும் போது ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகிறது…
இது குறித்து தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்…
தமிழக அரசு, திமுக ஆதரவாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் ஒன்றிய அரசு என அழைக்கும் நிலையில் பாஜக ஆதரவாளர்கள் மத்திய அரசு என்றே அழைத்து வருகின்றனர்…
இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆல் இந்தியா ரேடியோ வில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் ஒருவர் வாட்ஸ்அப் குரூபபில் பதிந்த ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது…
இப்பதிவில் அவர் “ஒரு முக்கியமான வேண்டுகோள்: நமது செய்தியில் ஒரு போதும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், மத்திய அரசு என்று மட்டுமே குறிப்பிடவும் என பதிந்துள்ளார்….
இதனை நெட்டிசன்கள் பலரும் கோபத்துடன் பகிர்ந்து வருகின்றனர்…
பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், நீங்கள் அரசு அதிகாரியா, அரசியல்வாதியா என கடிந்துள்ளார்…

