சில நாட்களாக தமிழகத்தில் பாஜக எடுத்திருக்கும் ஆயுதம், “கிறித்துவ பள்ளிகளில் மதமாற்றம்” எனும் பரப்புரை…
கடந்த 200-300 ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வரும் பல்லாயிரக்கணக்கான கிறித்தவ பள்ளிகளில் இதுவரை வராத குற்றசாட்டு “மதமாற்றம்“
ஆனால் பாரதிய ஜனதாவினர் இவ்வளவு வன்மத்துடன் இவ்வளவு கீழ்தரமான அரசியலை முன்னெடுப்பார்கள் என எண்ணவில்லை….
நான் 2008 முதல் 2011 வரை படித்த பள்ளி சேலம் சிறுமலர் மேல்நிலை பள்ளி (Little Flower Higher Secondary School)…
ஒரு கிறித்தவ பள்ளிக்கூடம்…
அல்ல அல்ல…ஒரு சமூகநீதி பள்ளிக்கூடம்…
சிறுமலர் மேல்நிலை பள்ளி, சேலம்
எவ்வளவு அழகான நாட்கள்…
நினைவிலிருந்து அழியா சுவடுகள்…
கிட்டத்தட்ட 3500 மாணவர்கள் படித்து கொண்டிருந்த அப்பள்ளியில் 75% இந்து மாணவர்கள், 15% கிறித்தவ மாணவர்கள், 10% இஸ்லாமிய மாணவர்கள்…
நூலகத்தில் புத்தகத்தை பெற்று கொண்டு புத்தகம் படிக்க அமைதியை தேடி நான் செல்லும் ஒரே இடம் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் சர்ச் தான்…
பரிட்சை நாட்களில் கிறித்தவ மாணவர்கள் அனைவரும் அங்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்க ஒரு ஓரத்தில் நான் அங்கு அமர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் “அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள்” புத்தகத்தை படித்து முடித்த நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன…
ஜும்மா தொழுகை :
நான் அந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்த முதல் ஆண்டு தலைமையாசிரியராக வந்தார் அருட்தந்தை. அருளப்பன் அவர்கள்…
அவர் வந்த பிறகு பள்ளியில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன…
காலையில் பள்ளியில் நுழைந்தால் மாலை மணியடித்த பிறகே வெளியேற வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது…
எல்லா கட்டுப்பாடுகளும் மாணவர்களின் நலனுக்காக தான் வந்தது என்றாலும்,
இஸ்லாமிய மாணவர்கள் அதுவரை வெள்ளிக்கிழமையன்று ஜூம்மா தொழுகைக்கு வெளியில் சென்று மஸ்ஜிதில் தான் தொழுது வந்தனர்…
புதிய கட்டுபாடுகள் வந்த பிறகு நாங்கள் சிலர் சேர்ந்து ஆலோசித்தோம்…
ஒரு மாணவன் உணர்ச்சி மிகுதியில் சுவர் ஏறி குதித்து சென்று தொழலாம் என்றார்…
இன்னொரு மாணவர் வகுப்பறையில் தொழுவோம் என கூறினார்…
பிறகு நான் “சுவர் ஏறி குதித்து செல்வது பெரிய தப்பு…அதெல்லாம் வேணாம்…
கிளாஸ்ல தொழுதா மத்த மாணவர்களுக்கு டிஸ்டர்ப் ஆகும், நமக்கும் தொழுகையில் டிஸ்டர்ப் ஆகும் வேணாம்…
ஒன்னு பண்ணுவோம்…
லஞ்ச் டைம்ல தான் தொழ போறோம்,
மூடி அமைதியா இருக்குற கம்யூட்டர் லேப்ல தொழுவோம், அதுக்கு பெர்மிஷன் கேப்போம்” என்றேன்…
அதற்கு எல்லா மாணவர்களும் ஆமோதிக்க யார் போய் பெர்மிஷன் கேட்பது ? அதுவும் அருளப்பன் ஃபாதர் கிட்ட…
நானும் இன்னொரு மாணவர் உமரும் சென்றோம்…
பயம் இருந்தது…
கிறித்தவ பள்ளி…அனுமதி கிடைக்கிறது கஷ்டம் என்று தான் நினைத்தோம்….
ஃபாதர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னோம்…
எல்லாமே கேட்டு விட்டு புன்னகைத்தார்…
“உங்கள் இறைப்பக்தியை கண்டு வியக்கிறேன், கண்டிப்பாக லேப் சாவியை பெற்று தொழுகை நடத்துங்கள்” என்றார்…
அடுத்த நாள் Prayer Time இல் அறிவிப்பும் செய்தார் “மதிய நேரத்தில் கம்யூட்டர் லேப் பக்கம் எந்த மாணவரும் செல்ல கூடாது, அங்கு இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்துவார்கள், அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்” என…
இது தான் தமிழ்நாடு…
இது தான் தமிழ்நாட்டில் கிறித்தவ பள்ளிகளின் நிலை…
அங்கு மதம் பரப்பபடுவதில்லை..
மாறாக அன்பு, அறிவு, ஒழுக்கம், சமூக நீதி இவைதான் பரப்பபடுகின்றது…
இனியும் இந்த டாபிக்கை வைத்து அண்ணாமலை அரசியல் செய்தால் மக்கள் அவர் முகத்தில் கரியை பூசும் நாள் தொலைவில் இல்லை…
✍🏻ஆம்பூர் சல்மான்✍🏻


