டீ குடித்தாலும் GPay இருக்கா அண்ணாச்சி என கேட்கிறோம்…
இட்லி கடை முதல் Flight Ticket வரை அனைத்திற்கும் GPay, PhonePe, PayTM என நாம் இந்த UPI Payment முறைக்கு Addict ஆகி விட்டோம்…
இன்னும் சில நாட்களில் பேருந்துகளிலும் ஆட்டோமேட்டிக் டிக்கெட்டிங் முறை கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…
அதிலும் இதே UPI மற்றும் கார்டு முறை மூலம் பேமென்ட் செய்ய முடியும்…
இது நாள் வரை UPI பயன்படுத்துவதற்கு நாம் எந்த கட்டணமும் செலுத்தாமல் இருந்தோம்…
ஆனால் RBI தற்போது UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதை பற்றி ஆலோசித்து வருகிறது…
ஆனாலும் ஒரு நல்ல செய்தி சொல்லட்டுமா ??
இந்த கட்டண முறை பயனர்களுக்கு இல்லையாம்…
அதாவது User to User கட்டணம் கிடையாது…
User to Business என்றால் தான் கட்டணமாம்…
அதுவும் பிசினஸ் நடத்துபவர்களுக்கு தானாம்…
புரியுற மாதிரி சொல்லனும்னா…
நீங்க எனக்கு 50 ரூபாய் அனுப்பினா உங்களுக்கும் கட்டணம் இல்லை எனக்கும் கட்டணம் இல்லை…
அதே நீங்களும் நானும் Zaitoon Restaurant ல 1000 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு அந்த பில்ல நீங்க Pay பண்ணிங்கனா… அப்பவும் உங்களுக்கு கட்டணம் இல்ல…Zaitoon Restaurant க்கு கட்டணம் விதிக்கப்படும்…
இது இன்னும் அமலில் வரவில்லை…
ஆலோசனையில் தான் உள்ளது…
